Skip to main content

'புல்'லுக்கே வக்கில்ல... தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமா? மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

 

மேகதாது அணை கட்ட அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன. 
 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 
 

தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல. உழவர் கண்ணிரை துடைப்பதற்காக நடக்கும் போராட்டம். மேகதாது அணை பற்றி முதல் அறிவிப்பு வந்தபோதே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு தடை உத்தரவை கூட ஜெயலலிதா, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அரசுகளால் பெற முடியவில்லை. இடைக்காதல தடை உத்தரவு பெற்றிருந்தல் மேகதாது அணை கட்ட கர்நாடகம் துணிந்து இருக்காது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு எதிர்க்காமல் தூங்கி வருகிறது. 
 

கர்நாடக அரசின் அணை திட்டத்துக்கு அனுமதி கிடைத்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுதான். மேகதாது அணை பிரச்சனை பற்றி விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். 
 

மத்திய பாஜக அரசை பொறுத்தவரையில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அதற்கு உதாரணமாக அண்மையில் கஜா புயல் சம்பவம்தான். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த பாதிப்பில் இருந்து அம்மக்கள் மீண்டுவர 20 வருடங்களுக்கு மேல் ஆகும். கஜா புயலால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசோ மேகதாது அணை கட்டி செயற்கை பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. 
 

கஜா புயல் மாதிரி வேறு எந்த மாநிலத்திலாவது பேரிடர் ஏற்பட்டிருந்தால் மோடி போயிருப்பாரா மாட்டாரா? ஏன் தமிழ்நாட்டிற்கு இன்னும் வரவில்லை. வேறு மாநிலமாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான கோடி வழங்கப்பட்டிருக்குமா பட்டிருக்காதா? ஆனால் இன்று தமிழகம் எதிர்பார்த்த தொகையை வழங்க மத்திய அரசு இருக்கிறதா? 
 

எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை மலரும் தமிழ்நாட்டுல... 'புல்'லே வளரவில்லை... 'புல்'லுக்கே வக்கில்ல... தாமரை மலர்ந்துவிடுமா? ஏற்கனவே பிரதமர் வருதிமுக கருப்பு கொடி போராட்டம் நடத்தியிருக்கிறது. இதே காவிரி பிரச்சனையை மையகமா வைத்து நாம் நடத்திய போராட்டத்தின் காரணமாக தமிழகம் வந்த பிரதமர், சாலை வழியாக பயணிக்காமல் விமானத்திலேயே பறந்தார். அதனை மோடி மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். மேகதாது அணையை கொண்டுவந்து தமிழகத்தை வஞ்சிக்க நீங்கள் நினைத்தால், இந்த விவகாரத்தில் தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு நல்ல முடிவை எடுத்து அறிவிக்காவிட்டால், வைகோ, கி.வீரமணி அவர்கள் சொன்னதை நான் முன்மொழிந்து சொல்கிறேன், நீங்கள் (மோடி) எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டிற்கு வரமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்