Skip to main content

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஆண் குழந்தை... ஒன்றரை மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

 Missing boy at Central Railway Station ... Police rescue in an hour and a half!

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார்-லதா தம்பதியினர் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களது ஒன்றரை வயது ஆண் குழந்தை ருத்விக்கை தவறவிட்டுள்ளனர். குழந்தை காணாமல் போனது தொடர்பாக அங்கு பணியிலிருந்த போலீசாரிடம் தம்பதி புகாரளித்த நிலையில் அது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குழந்தை நடைமேடை அருகே நடந்து சென்றதைக் கண்டறிந்த போலீசார் புகாரளித்த 30 நிமிடங்களில் குழந்தை ருத்விக்கை மீட்டுப் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்