Skip to main content

பசும்பொன்னில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை! 

Published on 30/10/2022 | Edited on 30/10/2022

 

Ministers respect on behalf of the Tamil Nadu government in Pasumpon!



பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன், கே.என்.நேரு, மூர்த்தி, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர். 

 

முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைக்குஅமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். 

 

சார்ந்த செய்திகள்