Skip to main content

சசிகலா விஷயத்தில் அமைச்சர் செங்கோட்டையனின் நிலை?    

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
sengkottiayan

 

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது துறையில் எந்த முடிவையும் தீர்க்கமாக எடுக்க முடியாமல் இந்த கரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.


இன்று 1.7.20 புதன்கிழமை ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில்  புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலைகளையும், குடிநீர் தொட்டிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் வரபாளையத்தில் 30 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக செயல்பட்டு வருகிறது என்றார்.  ஆன்லைன் வகுப்புகள் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு,

இவை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு வைத்த பிறகே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்துகள் இயங்கினால் மட்டுமே மாணவர்களான அவர்களுக்கு தேர்வு வைக்க முடியும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூபாய் 248 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்கள் தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்யலாம் என்று ஆலோசித்து முடிவடுக்கப்படும். பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில்தான் வெளியிடப்பட்டு வருகிறது. நிலைமைகள் சரியான பிறகே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்படும். ஆனால் இப்போதுள்ள சூழல் படி பார்த்தால் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், வருவாய்துறை, மருத்துவத்துறை என அனைவரது ஆலோசனைகள் கேட்கப்பட்டு பின்னர்தான் பள்ளிகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக வாய்ப்பு உள்ளது சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும். 8 ஆம் வகுப்பில் திறனாய்வு தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு 248 கோடி ரூபாய் நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. என்று கூறிய அவரிடம் சசிகலா விடுதலையாகப் போகிறார் என்ற செய்தி என ஒரு செய்தியாளர் கேட்க தொடங்கும் போதே எல்லோரும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம்... என கூறி விட்டு வணக்கம் போட்டுவிட்டு வேகமாக கிளம்பி விட்டார். அங்கிருந்த ஒரு மூத்த ர.ர. "அமைச்சர் சொன்ன சமூக இடைவெளி என்பது சசிகலா விஷயத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி எடுக்கிற முடிவுபடிதான் செங்கோட்டையன் நடவடிக்கை இருக்கும் என்பது. அதுதான் வாய் பேசாமல் இடைவெளியுடன் இருக்கிறாராம்..." என்றார்.

 

சார்ந்த செய்திகள்