Skip to main content

தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் ப. சிதம்பரம்... அமைச்சர் சி.வி.சண்முகம்

Published on 22/08/2019 | Edited on 22/08/2019
P. Chidambaram




தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் ப.சிதம்பரம் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவிசண்முகம் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

அப்போது அவர், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அரசையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் குறை கூறியவர் ப.சிதம்பரம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு கனிமொழி கைது செய்யப்பட்டார். தற்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு ஒரு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
 

சார்ந்த செய்திகள்