Skip to main content

மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Metro Rail Service Extension

 

தீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரத்தில் மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவை, நாளை (09.11.2023), நாளை மறுநாள் (10.11.2023) மற்றும் சனிக்கிழமை (11.11.2023) ஆகிய 3 நாட்களில் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை 09.11.2023 (வியாழக்கிழமை) 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்