Skip to main content

‘குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கிவிடும்’ கல்வெட்டு சொல்லும் செய்தி

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

The message of the inscription is ‘Oxidation will be completely removed if the Guru’s foot is bowed’

 

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வில்லூர் பெரிய கண்மாய் மடையில் கி.பி. 9, 13, 16ஆம் நூற்றாண்டு என வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் வழியில் உள்ள வில்லூரில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் மேற்பரப்பு கள ஆய்வு நடைபெற்றது. இதில், பேராசிரியர் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன் நாகபாண்டி, பழனிமுருகன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது பெரிய கண்மாய் மடை பகுதியில் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த துண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டது.

 

The message of the inscription is ‘Oxidation will be completely removed if the Guru’s foot is bowed’

 

இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியதாவது, “வேளாண்மையில் செழிப்பான பகுதியாக விளங்கிய இவ்வூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் நீர் வெளியேற மூன்று கண் மடை அமைந்துள்ளது. முதல் கண்ணின் சுவர் பக்கவாட்டில் 1 அடி நீளம், ½ அடி அகலம் கொண்ட ஒரு கல்லில் 6 வரிகள் கொண்ட கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், இரண்டாவது கண்ணில் சுவரின் உட்புறமாக சொருகப்பட்ட நிலையில் 3 வரிகள் கொண்ட கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டு நீர் வழிந்தோடும் இடத்தில் இருப்பதால், பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளன. அதனால் அவற்றின் பொருளை அறிய முடியவில்லை.

 

The message of the inscription is ‘Oxidation will be completely removed if the Guru’s foot is bowed’


 

கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு செய்தி: 


பெரிய கண்மாயின்மூன்றாவது கண் மடையில் வலப்புற சுவரில் 1 அடி அகலம், 3 அடி நீளம் கொண்ட ஒரே கல்லில் 11 வரிகள் கொண்ட கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில், ‘சகல குரு நாயனே, சகல குரு பாதமே, சகல விஷமும் தீரும் எங்கே விஷந்தீண்டினாலும் நன்’ என்ற வரி பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினைப் படியெடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறையில் இருந்து  ஒய்வுபெற்ற  முனைவர் சொ. சாந்தலிங்கம் உதவியுடன் ஆய்வு செய்தபோது, எங்கே விஷம் தீண்டினாலும் குருவோடு குருவின் பாதம் பணிந்தால் விஷத்தன்மை முற்றிலும் நீங்கிவிடும். இக்கல்வெட்டினை வேறு பகுதியிலிருந்து எடுத்து வந்து பெரிய கண்மாய் கண் மடை கட்டப்பட்டிருக்கலாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்