Skip to main content

போலி பாஸுடன் பலர்... அதிமுக பொதுக்குழுவில் சர்ச்சை!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

 Many with fake pass ... Controversy in AIADMK general body!

 

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டுள்ளார். இன்று அதிகாலை முதலே அதிமுக தொண்டர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து வானகரம் புறப்பட்டுள்ளார். அதேபோல் கோமாதா பூஜைக்கு பிறகு ஓபிஎஸ் வானகரம் புறப்பட்டுள்ளார்.

 

பொதுக்குழுவில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி  என்ற நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு பலர் போலி  பாஸுடன் வந்ததாக தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்