Skip to main content

மாலைக்குள் தீவிர புயலாக மாறும் 'மாண்டஸ்' - தலைமை செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

 'Mantus' to become severe storm by this evening-emergency advisory led by Chief Secretary

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 420 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 520 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வந்த நிலையில் தற்பொழுது புயல் நகரும் வேகம் 12 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாகச் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடைந்து சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இதனால் புயல் எச்சரிக்கை பணிகள் காரணமாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக நாளை வேலூர், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 10 ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு புயல் எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்