Skip to main content

முறைகேடு சர்ச்சை...  குரூப்-4 புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு!!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தொடர் கைது நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

malpractice Controversy... Group 4 - New Competition List Released


இந்நிலையில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வின் புதிய தேர்ச்சி பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையளத்தில் வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பதிவெண் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் பிப்.1 ஆம் தேதி முதல், பிப்.7 ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்