Skip to main content

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம்; உறுதிமொழி எடுத்துக் கொண்ட மருத்துவர்கள் 

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

mahatma gandhi anniversary doctors taken sworn 

 

நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

 

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் நேரு மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்டவர்களின் தலைமையில் இன்று மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய அனைத்து துறைகளைச் சார்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

இதில் தீண்டாமை ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டு, இன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தின உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். மேலும் இன்று மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்