Skip to main content

பிரதமருக்கு இணையதளம் மூலம் கடிதம் எழுதலாம் !

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சனை மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சனைகளை உட்பட அனைத்தையும் நேரடியாக பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசு இணையதள முகவரியை வெளியீட்டது. இதற்கான இணையதள முகவரி : https://pmopg.gov.in/pmocitizen/Grievancepmo.aspx . இந்த இணைதளத்திற்கு சென்று மக்கள் எளிதாக தங்களின் குறைகளையும் , மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். பிரதமருக்கு கடிதம் எழுத உள்ள விண்ணப்பத்தில் பெயர் , தந்தை பெயர் , நிரந்தர முகவரி , தொலைபேசி எண், மாவட்டம் , மாநிலம், ஈ-மெயில் முகவரி போன்றவை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

letter to prime minister

இணையதள மூலம் கடிதம் அனுப்பிய பிறகு கடிதம் அனுப்பியதற்கான ஒப்புகை எண் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும்  ஈ-மெயில் முகவரிக்கு வரும். இந்த ஒப்புகை எண்ணை பயன்படுத்தி இணையதள முகவரி : pgportal.gov.in யில் தனது கடிதம் தொடர்பான நிலையை அறியலாம். மேலும் பிரதமரை நேரில் சந்திக்க இந்த இணையதளத்தை பயன்படுத்தி நேரம் கேட்கலாம் உட்பட பல எளிமையான வழிமுறைகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசு ஏற்படுத்திய இந்த வசதிகள் கிராம மக்களுக்கு தெரியவில்லை மற்றும் இளைஞர்களுக்கு கூட இந்த இணையதளம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது இந்த இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்