Skip to main content

கடையை அடித்து நொறுக்குவோம்... பொங்கி எழும் பெண்கள்! 

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

எத்தனை முறை சொன்னாலும், எத்தனை முறை மனு கொடுத்தாலும் ஆவண செய்கிறோம் என்று மட்டுமே கூறும் அதிகாரிகள் நடவடிக்கை என்பது எதுவும் எடுப்பதில்லை எங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கால் நாங்கள் நித்தம் நித்தம் குடிகாரர்களின் ஆட்டத்தை கண்டுகழிக்க வேண்டியுள்ளது என குமுறுகிறார்கள்.

 

Let's hit the shop ... raging girls!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த அரியப்பம்பாளையம் மக்கள். சக்தியமங்கலம் ஈரோடு நெடுஞ்சாலையில்  புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை அருகே விவசாய நிலங்கள் வீட்டுமனைகள், பிளைவுட் கடைகள், குடோன்கள்,  டிராக்டர் ஒர்க்ஷாப் என மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாக உள்ளது.  எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே கலெக்டர் தொடங்கி எல்லோருக்கும்  மனு கொடுத்து இருந்தோம்.   டாஸ்மாக் அதிகாரிகள்  அகற்றி விடுகிறோம், உடனடியாக ஆவன செய்கிறோம்  என்று கூறினார்கள்.

ஆனால் ஒரு மாதமாகிவிட்டது இதுவரை டாஸ்மாக் கடையை அகற்ற வில்லை. எனவே இனிமேலும் பொறுக்க முடியாது குடிகாரர்களின் தொல்லை எங்களால்  தாங்கவே முடியவில்லை இந்த கடையை உடனடியாக  அகற்றவில்லை என்றால் இனி நாங்கள் பெண்கள் ஒன்று இரண்டு கடையை அடித்து நொறுக்குவோம் வேறுவழியில்லை கடைசியாக  சத்தியமங்கலம்  தாசில்தாருக்கு இந்த மனுவை கொடுத்துவிட்டு நாங்கள் எங்கள் போராட்டத்தை சிலநாட்களில் செய்வோம் என மனு கொடுக்க வந்த பெண்கள் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்