Skip to main content

''காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவென்றாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது'' - திருமாவளவன் கருத்து! 

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

 '' Decision taken over time is acceptable '' - Thirumavalavan comment!

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடிவந்த நிலையில், தற்போது பிரதமர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ‘வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில், ''இது காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவு. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவென்றாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்