Skip to main content

'ஸ்ட்ராங் ரூம்' சிசிடிவி பதிவுகளை பார்வையிட்ட கே.என்.நேரு!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

KN NEHRU VISIT EVM

 

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப் பதிவானது கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும் வாக்குப்பதிவை மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பலதரப்பட்ட கட்சிகளால் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 அடுக்குப் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை திமுக தேர்தல் பொறுப்பாளராக உள்ள கே.என்.நேரு, இன்று ஜமால் முகமது கல்லூரியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் பார்வையிட்டுச் சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்