Skip to main content

"27 இல்லை, 270 அமாவாசைகள் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி இனி முதல்வராக முடியாது.." - கார்த்தி சிதம்பரம்

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

ப்

 

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரச்சார இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, "  ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால் வரும் 2024ம் ஆண்டு அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும், அதற்கு இன்னும் 27 அமாவாசை மட்டுமே இருக்கிறது" என்று தெரிவித்து இருந்தார்.

 

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்க்கருத்து வைத்து வரும் நிலையில், நேற்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எடப்பாடியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியிருந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், " அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு அவரை சித்தப்பா என்று அழைக்கலாம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், " போகிற இடங்களில் எல்லாம் எடப்பாடி மட்டும் இல்லை, முன்னாள் அமைச்சர்கள் கூட இதே கருத்தை திரும்பத்திரும்பக் கூறுகிறார்கள். இவர்கள் புரிந்து பேசுகிறார்களா என்று தெரியவில்லை. அதிமுகவால் 27 அல்ல 270 அமாவாசை ஆனாலும் திரும்பி ஆட்சியைப் பிடிக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியால் இனி முதல்வர் ஆக முடியாது. வெற்று பேச்சு பேசி இனி பலனில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்