Skip to main content

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

lj

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல் வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடையும். வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 22ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22 என்றும் அறிவித்திருந்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆகியவற்றை முடித்து அக்கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு தாக்கலைத் துவங்கியுள்ளனர்.

 

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (15.03.2021) மதியம் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்