Skip to main content

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வித்தியாசமான திடீர் போராட்டம் 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
100 days workers



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ளது தொப்பையான்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்ட பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை அந்த ஊரில் உள்ள குளத்தை சீர் திருத்தம் செய்யும் பணியை அந்த ஊரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
 

அந்தப் பணியின் போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அந்த இயக்கத்தை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, கந்தசாமி, கலியமூர்த்தி ஆகியோர் தொழிலாளர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

அப்போது தொழிலாளர்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இந்த பதாகைகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக மத்திய மாநில அரசு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் நலவாரியத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

வேலை செய்துகொண்டே இடையில் தங்கள் கோரிக்கை கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டம் என்றால் வேலைகளை விட்டுவிட்டு சம்பந்தப்பட்ட அலுவலக கங்களுக்கு ஆட்களை திரட்டி சென்று போராட்டம் நடத்துவதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வேலை செய்துகொண்டே தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது வித்தியாசமாக இருந்தது. மத்திய மாநில அரசுகள் கிராம தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் முன்வரவேண்டும் என்கிறார்கள் கிராமங்களில் ஒரு நாள் வேலை பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்