Skip to main content

முன்னாள் காதலனால் நின்று போன மகளின் திருமணம்; விபரீத முடிவெடுத்த தந்தை

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

kallakurichi district college student love issue 

 

மகள் திருமணம் நின்று போனதால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகே உள்ள அக்கராபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 50). இவர் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவரது மகளுக்கு 26 ஆம் தேதி திருமணம் செய்ய இரு தரப்பினர் ஒப்புதல் உடன் முடிவு செய்யப்பட்டு உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்துள்ளார்.

 

முன்னதாக இவரது மகள் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது முத்துச்செல்வன் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துச்செல்வன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பின்னர் தெரிய வந்ததால் அவருடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.

 

இந்நிலையில், முத்துச்செல்வன் மணப்பெண்ணுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமணத்திற்கு முதல் நாள் மணமகனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி உள்ளனர். இந்த தகவலறிந்த மணமகளின் தந்தை குமார் மனவேதனை அடைந்து, அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இச்சம்பவம் அக்கராபாளையம் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமாரின் மனைவி உமா கொடுத்த புகாரின் பேரில் கச்சிராபாளையம் போலீசார் திருமணத்தை நிறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்