Skip to main content

ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து ஜாக் டோர்சே விலகல்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

ுப

 

ட்விட்டர் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து ஜாக் டோர்சே விலகிய சம்பவம் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. உலகம் முழுவதும் தகவல் தொடர்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தாலும் ட்விட்டர் வளைதளத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் சாமானியன் வரை அனைவரும் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை இருந்த சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போது ட்விட்டர் புதிய பொலிவோடு செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் அந்நிறுவனத்துக்கு புதிய அதிர்ச்சியாக அந்நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். இது தனக்கு மிகவும் கடினமான முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த பொறுப்பிற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பாரக் அக்ரவல் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்