Skip to main content

“இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயல்” - பாமக ராமதாஸ் வேதனை

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

'It is an inhumane act of brutality'-PMK Ramdas

 

காஞ்சிபுரம் மாவட்டம் வெப்பமேடு குண்டுகுளம் பகுதியில் கிராமப்பகுதியை ஒட்டி வந்தவாசி புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலைப்பகுதியை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் அமைந்துள்ளன. ஆனால், இடையிடையே வயல் மற்றும் காட்டுப்பகுதிகள் காணப்படுகிறது. 12ந் தேதி மாலை தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக தான் காதலித்து வந்த மாணவியை அழைத்து வந்து குண்டுகுளம் பகுதியில் தனிமையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அந்தப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 5 பேர் மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், விமல், சிவக்குமார், விக்னேஷ், தென்னரசு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் குண்டுகுளம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய பொழுது தப்பித்து ஓட முயன்ற மணிகண்டன், தென்னரசு உள்ளிட்ட மூன்று பேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

'It is an inhumane act of brutality'-PMK Ramdas

 

இந்நிலையில், மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும். கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 

காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள நான்காவது கூட்டுப்பாலியல் வன்கொடுமை இதுவாகும். மதுவும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தடையின்றி கிடைப்பதுதான்  இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணம் ஆகும். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும். போதைப்பொருட்கள் ஒழிப்பு, தீவிரக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் இனி எங்கும் பாலியல் வன்கொடுமை நடக்காத நிலையை தமிழக காவல்துறை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்