Skip to main content

மானாமதுரையில் வங்கிக்குள் கொலை முயற்சி... துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

மானாமதுரை அமமுக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் சம்மந்தபட்டதாக கூறப்படும் தங்கமணி என்பவரை மானாமதுரையில் உள்ள வங்கி ஒன்றில் வைத்து கொலை செய்ய முற்பட்ட கும்பலை தடுக்க வங்கி காவலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் வங்கி வாடிக்கையாளர் காயமடைந்துள்ளார். கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை பிடிக்க மானாமதுரை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

  incident at Manamadurai bank ... One person injured in shooting


ஏற்கனவே அமமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் கொலையாளிகள் சிக்காததால் இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்திருந்தது. மேலும் பலர் இந்த கொலையில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தங்கமணி என்பவருக்கு இந்த கொலையில் சம்பந்தம் உள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட அமமுக நிர்வாகி சரவணனின் உறவினர்கள் மூலம் வங்கிக்கு வந்திருந்த தங்கமணியை கொல்ல முயன்ற நிலையில், வங்கியின் பாதுகாப்பு கருதி வங்கி காவலாளி சுட்டதில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்தார்.

ஆனால் கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்களை பிடிக்க தீவிரம் காட்டிவரும் போலீசார், மாவட்டம் முழுவதும் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்