Skip to main content

இது 'பப்ஜி' காதல்... தஞ்சமடைந்த ஜோடிக்கு திருமணம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
incident in kaniyakumari

 

ஆன்லைன் 'பப்ஜி' கேம் மூலம் மலர்ந்த காதல், திருமணத்தில் முடிந்துள்ள நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரைச் சேர்ந்த அஜன் பிரின்ஸ் என்ற இளைஞருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள ஆசாரிபெற்றுவிளையைச் சேர்ந்த பப்பிஷா என்ற பெண்ணுக்கும் பப்ஜி கேம் விளையாடும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப் போக்கில் பழக்கம் காதலாக மாற இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து  பப்பிஷா வீட்டை விட்டு கடந்த 19 ஆம் தேதி வெளியேறினார். 

தனது மகளைக் காணவில்லை என பப்பிஷாவின்  பெற்றோர்கள் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் 26 ஆம் தேதி காதல் ஜோடி இருவரும் திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இவர்களது காதலுக்கு இளைஞரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்