Skip to main content

இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கொத்தனார் வேலை செய்த இவர் கடந்த 11.07. 2017 அன்று  தீர்த்தம்பாளையம் கிராமத்துக்கு கட்டட வேலைக்காக  சென்ற போது அந்த கிராமத்தை  சேர்ந்த ராமு என்பவருடைய இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

child rape


அதுகுறித்து சிறுமியின் தாயார் சோபனா சிதம்பரத்திலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல் துறையினர்  பழனிசாமியை கைது செய்து சிறையிலடைத்தனர். 

 

இந்த வழக்கு விசாரணை  கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஒரு வருடமாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், சிறுமிகளை பாலியல் துன்புறுத்துவதை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ்,  குழந்தையை வன்கொடுமை செய்த  பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,  10 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு வழக்கு பிரிவில் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய்  அபராதமும் விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என இன்று தீர்ப்பு வழங்கினார். 

சார்ந்த செய்திகள்