Skip to main content

இரு முயற்சிகளும் தொய்வு;ஐஐடி தொழில்நுப்ட வல்லுநர் குழு விரைவு!

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்  26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருக்க, முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல் சுவாசக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கபட்டுவருகிறது. தற்பொழுது சுஜித் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கிணற்றுக்குள் உள்ள குழந்தைக்கு ஒருபுறம் மன தைரியத்தை கொடுக்க அவரது உறவினர்களும் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் முயற்சி எடுத்து வருகின்றனர்.

 

 IIT  Professional Team Quick!

 

இந்நிலையில் குழந்தையின் ஒரு கைக்கு சுருக்குக் கயிறு மாட்டப்பட்ட நிலையில் மற்றொரு கையிக்கு சுருக்கு மாட்ட பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் மீண்டும் ஜேசிபி  இயந்திரங்களைக் கொண்டு பக்கவாட்டில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. ஆனால் 15 அடிக்குமேல் பாறை இருந்தததால் தற்போது அந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஒரு கையில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு கயிறும் மணலின் ஈரப்பதம் வழுவழுப்புத்தன்மை காரணமாக விலகியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. அதனை அடுத்து தற்போது ஐஐடியை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முடியும் என அந்த இடத்திற்கு விரைந்து வந்து உள்ளனர்.

தற்பொழுது பள்ளம் தோண்டும் முயற்சிக்கும், மணிகண்டன் கொண்டுவந்த சிறப்பு கருவியின் மூலம் மீட்கப்படுவதற்கான  முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் ஐஐடி வல்லுனர்கள் குழு குழந்தையை  மீட்க போராடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்