Skip to main content

நடிகர் சங்க தேர்தலில் திமுக தலையீடா?

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நடிகர் ராதாரவி ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்தார்.பின்பு அங்கு இருந்து அதிமுக சென்றார்.மறுபடியும் திமுக வந்த ராதாரவி, ஒரு பட விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சையான கருத்தை பேசியதற்காக அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார்.பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாரவி பேசும் போது 'நான் ஒரு சினிமா நிகழ்ச்சியில் நயன்தாரா குறித்து சில கருத்துகளை பேசினேன். அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டேன். ஆனாலும் என்மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் நானே கட்சியிலிருந்து விலகி விட்டேன்.
 

radharavi



மேலும்  யார் யாருக்கு என்ன உறவு என்பதை தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்' என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், 'திமுகவில் இருந்து விலகி இருந்தாலும் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற முடிவை இரண்டு  நாட்களுக்கு முன்னர்தான் முடிவு செய்தேன். ஏனென்றால் செய்யாறில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக நிர்வாகி ஒருவர் பேசினார். நான் பாக்யராஜ் அணியின் பக்கம் நடிகர் சங்க தேர்தலில் இருப்பதால் அந்த அணிக்கு யாரும் உதவக் கூடாது என திமுக தலைமை கூறியதாக அவர் தெரிவித்தார். அப்போது தான் தெரிந்தது என்னை ஒதுக்கிவிட்டார்கள் என்று, எனவே தான் அதிமுகவில் மீண்டும் இணைத்து கொண்டேன். நடிகர் சங்க தேர்தலில் திமுகவின் தலையீடு இருக்கிறது. இது தலைமைக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. நான் திமுகவின் தலைமையை தான் நம்பி தான் அங்கு சென்றேன். ஆனால் திமுக தலைமை என்னை கைவிட்டுவிட்டார். நீங்கள் கூறிய இரட்டைத் தலைமை தற்போது திமுகவில்தான் உள்ளது என்று ராதாரவி செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

சார்ந்த செய்திகள்