Skip to main content

IClCI Lombard வங்கி முன்பு திருமாவளவன், வேல்முருகன் போராட்டம் 

Published on 21/02/2018 | Edited on 21/02/2018
thiruma

வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை தரமறுக்கும் IClCI Lombard  (ஐசிஐசிஐ லொம்பார்டு) நிறுவனத்தைக் கண்டித்தும் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் நுங்கம்பாக்கத்தில், உத்தமர் காந்தி சாலையில் இந்தியன் ஆயில் பவன் அருகே உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் 20.02.2018 நேற்று காலை முதல்  தற்போது வரையிலும் 24 மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

IClCI Lombard

 

விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை முழுவதும் வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்ற வகையில் நடைபெறும்  விவசாயிகளின் போராட்டத்துக்கு 21.02.2018 இன்று காலை 11 மணி முதல் அரசியல்கட்சிகள்,  விவசாயசங்கங்கள்,  தமிழ்த்தேசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், இளையோர் இயக்கங்கள் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில சென்று இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்

Next Story

சம்பளம் கட் - தலைமைச் செயலாளர் உத்தரவால் அரசு ஊழியர்கள் கொந்தளிப்பு

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
Chief Secretary



8வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, பழைய ஓய்வூதிய முறையையே தொடர வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. 
 

மேலும் கடந்த மாதம் நடந்த ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவில் அக்டோபர் 4ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்செயல் விடுப்பு குறித்து அரசு ஊழியர்களுக்கு ஜாக்டோ ஜியோவில் உள்ள சங்கங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. 
 

இந்த நிலையில் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 

அதில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு அரசு அலுவலகப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அனைத்து அலுவலக வருகைப் பதிவு நிலையை காலை 10.30 மணிக்குள், கிராம, தாலுகா, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். எனினும் உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் சங்கங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.