Skip to main content

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு...மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி! 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Husband's inappropriate relationship with another woman...Wife's shock!

வேறு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை மனைவிக் கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியைச் தீபக் என்பவருக்கு தீபா என்ற மாணவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. தீபக் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தீபக் அந்த பொண்ணுடன் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில், மனைவியைப் பார்ப்பதற்காக மதுபோதையில் வீட்டிற்கு வந்த தீபக்கிடம் கள்ளக்காதலியை விட்டு விட்டு தன்னுடன் வந்து வாழலாம் என தீபா தெரிவித்துள்ளார். பின்னர், தீபா உறங்க சென்ற போது, தான் அணிந்திருந்த வேஷ்டியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். 

 

காலையில் தீபா உறக்கத்தை விட்டு எழுந்து பார்த்தபோது, கணவர் தூக்கில் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்