Skip to main content

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவர்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

husband and wife incident police investigation

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்- ராஜகுமாரி தம்பதியின் மகள் அபி (என்கிற) ராஜலட்சுமி( வயது 24). இவர் அங்கன்வாடியில் சத்துணவு சமையலகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்த, கொத்தனார் வேலை செய்யக்கூடிய நாகராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

 

இத்திருமணத்திற்கு முன்னதாக ராஜலட்சுமிக்கு வேறு நபருடன் முதலாவது திருமணம் நடந்துள்ளதாகவும், முதல் கணவர் இறந்தவிட்ட நிலையில், இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த ஆறு வருடங்களாக ராஜலட்சுமி- நாகராஜ் தம்பதியினர் கம்மாபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதேசமயம் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நாகராஜ் அவ்வப்போது தனது மனைவியான ராஜலட்சுமி மீது சந்தேகமடைந்து, இருவருக்கும் பிரச்சினை ஏற்படுமென கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், நேற்று (25/06/2022) ராஜலட்சுமி வீட்டில் இருந்தபோது, கணவன், மனைவிக்கு இடையே, மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த நாகராஜ், வீட்டிலிருந்த கத்தியால் தனது மனைவி ராஜலட்சுமியின் கழுத்தைக் கொடூரமாக துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவி இறந்ததும் கம்மாபுரம் காவல் நிலையம் சென்று தனது மனைவியை கொன்றுவிட்டதாக சரணடைந்துள்ளார். அதன்பின்பு கம்மாபுரம் காவல்துறையினர் உடனடியாக ராஜலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

 

இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தாலும், குழந்தை பெற முடியாத சூழ்நிலையாலும் ஏற்பட்ட பிரச்சினையால் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்