Skip to main content

வீட்டு உரிமையாளரே காரணம்... குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

sivagangai

 

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் குறிஞ்சி நகரில் உள்ள கார்த்திகேயன் என்பவரது வீட்டில் பாலமுருகன் ஒத்திகைக்குத் தங்கியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது மனைவி காளீஸ்வரி(35) தனது மகன் அபிஷேக்(9) மற்றும் மகள் மங்கையர் திலகம்(14) ஆகியோருடன் இருந்துள்ளார். வீட்டில் இருப்பதற்கான ஒத்திகை காலம் முடிந்துவிட்டது எனக் கூறி வீட்டின் உரிமையாளர், வீட்டைக் காலி செய்யச் சொல்லியுள்ளார்.

 

கணவர் வெளிநாட்டில் இருப்பதாலும், இரண்டு குழந்தைகளோடு கரோனா காலத்தில் வேறு வீடு தேடுவது சிரமம் என்பதால் காலஅவகாசம் கொடுக்குமாறும் காளீஸ்வரி கேட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இருப்பினும் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கார்த்திகேயன் விடாப்பிடியாகக் கூறிவிட்டாரம். இந்த நிலையில் காளீஸ்வரி வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை என்பதால், அவரது உறவினர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். காளீஸ்வரி தூக்கில் தொங்கியபடியும், இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடியும் கிடந்துள்ளனர். அருகில் உள்ள சுவற்றில் தங்களது மரணத்திற்கு வீட்டின் உரிமையாளர், அவரது தாய், மனைவிதான் காரணம் என எழுதப்பட்டுள்ளது. 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்