Skip to main content

கனமழையால் வீடு இடிந்து சேதம்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொன்ன எம்.எல்.ஏ

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

House collapsed due to heavy rain; MLA personally condoled the victim's family

 

கடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் வீட்டு மேற்கூரை இடிந்து சேதம் அடைந்து விழுந்தது. இதனையறிந்த கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

 

பின்னர் அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இவருடன் கடலூர் வட்டாட்சியர் விஜய் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சஞ்சய், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், பிரகாஷ், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கீர்த்தனா ஆறுமுகம், கூட்டுறவுச் சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் தினகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்