Skip to main content

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை விடுத்தவர்கள் மீது தாக்குதல்; பாஜக பிரமுகர் கைது

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

hosur sundarasudeswarar temple issue

 

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை விடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேசுவரர் மலைக் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சந்திரசூடேசுவரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்தக் கோரி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்தக் கோரிக்கை வைத்தவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாஜக ஐ.டி பிரிவு மாவட்டத் தலைவர் மஞ்சுநாத் (வயது 42) மற்றும் வினோத் (வயது 32) உள்பட இருவரைக் கைது செய்தனர். மேலும் பாஜக மற்றும் வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்த தலைமறைவாக இருக்கும் மூவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்