Skip to main content

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்துவைத்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்பு! (படங்கள்)

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக ரூ. 65 கோடி செலவில், 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என பெயிரிடப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (30.09.2021) மாலை நேரில் வந்து திறந்துவைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி.சி. பட்வாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்