Skip to main content

எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

The High Court rejected the request of SP Velumani!

 

மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யக்கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

அதில், கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். அதைத் தொடர்ந்து, விசாரணை நடைபெறலாம் என்றும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்