Skip to main content

எடப்பாடி பழனிசாமி தரப்பின் மேல்முறையீடு; இன்று உயர்நீதிமன்றம் விசாரணை

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

The High Court is hearing the appeal of Edappadi Palaniswami today!

 

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (25/08/2022) விசாரிக்கிறது. 

 

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையேத் தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. 

 

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக வேண்டும் என்பதால் கூடுதல் அவகாசம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் முறையீட்டது.   இதனையேற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை இன்று தள்ளி வைத்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்