Skip to main content

பழனிசாமியை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

hjk


முதல்வர் பழனிசாமியை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். பல்வேறு மாநில ஆளுநர்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், ம.ஜ.க தமிமுன் அன்சாரி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

 

தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்று நேரில் இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார். முதல்வரின் தாயார் மறைவுக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்