Skip to main content

நான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன்... -பன்வாரிலால் புரோகித்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
banwarilal prohit

 

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை கலைவாணர் அரங்கில், மகாவீர் விருதுகள் வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் பேசும்போது நான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன் என்று கூறினார். இது அங்கும், சமூக வலைதளங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. அது எப்படி தனக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றவுடன், மற்றவர்களையும் அதை சாப்பிடக்கூடாது என்று உத்தரவிட முடியும். என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்குமுன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்ட்ரபதி பவனில் அசைவத்திற்கு தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குடியரசு தலைவர், ஆளுநர் ஒவ்வொருவரும் மாறும்போது அவர்களுக்கு ஏற்றாற்போல் மெனு மாற்றப்படுவது எப்போதும் நடப்பதுதான் எனவும் தெரிவிக்கின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்