Skip to main content

மணப்பாறை அருகே அரசு பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

nn

 

அண்மையில் கடலூரில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்தநிலையில் மணப்பாறை அருகே இதேபோல் கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் முதல் கட்டமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து திருச்சி மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலிருந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இந்த கொடூர விபத்தில் முதல் கட்டமாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமுற்றவர்கள் திருச்சி மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்