Skip to main content

"குழுவில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி"- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

"Glad to be in the group" - tamilnadu finance minister

 

ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் சீர்திருத்தக் குழுவில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவின் தலைவராக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதித்துறை அமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தகத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒடிசா மாநில நிதித்துறை அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய்வது தொடர்பாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் இருக்கக் கூடிய சிக்கல்களை சீர் செய்வதற்கும் இந்த குழு முயற்சிகளைச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இக்குழுவில் தாம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்