Skip to main content

கஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தற்கொலை

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
gaja


 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிகாடு கிராமத்தில் தென்னை விவசாயி சுந்தர்ராஜ் (வயது 55) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கஜா புயலால் தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 
 

ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து கொண்டிருந்தார். தென்னை மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார். கஜா புயலால் ஐந்து ஏக்கரிலும் பயிரிட்டிருந்த தென்னை முற்றிலும் சரிந்து சாய்ந்தது. அனைத்து மரங்களும் நாசமானதால் கடந்த 6 நாட்களாக சோகமாக காணப்பட்டார். இந்த நிலையில் சுடுகாடு பகுதிக்கு சென்ற அவர், அங்கு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

தமிழக அரசு ஒரு தென்னை மரத்திற்கு ரூபாய் 600, அதனை அகற்றுவதற்கு ரூபாய் 500 என 1100 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால்தான் அவர் மனமுடைந்தார் என்று கிராமத்தினர் கூறுகின்றனர். தென்னைக்கு உரிய இழப்பீடு அறிவித்திருந்தால் அவர் தற்கோலை செய்திருக்கமாட்டார் என்று அக்கிராம விவசாயிகள் கூறுகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்