Skip to main content

அரிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! 

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Former Minister M.R. Vijayabaskar struggle with Harikane lamp!

 

தமிழகத்தில் வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சட்டம், ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். இதில், அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியும், இனி இதன் விற்பனை சூடு பிடிக்கும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “ஊடகங்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரை சந்திக்கவில்லை என செய்திகளை வெளியிடுகிறார்கள். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தால் திமுக பயப்படுகிறது.


மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள். மின் உயர்வுக்கு மத்திய அரசு மீது பழியை போடுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, மின்கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்தாக விரைவில் பேருந்து கட்டணமும் உயரும். நிச்சயமாக அடுத்ததாக பேருந்து கட்டணம் உயரும். நம்ம ஊர் அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார். அடுத்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்துகிறோம் எனச் சொல்லி கொள்ளையில் ஈடுபடுவார். கலைஞரின் பேனாவிற்கு கடலில் சிலை வைக்க வேண்டுமா” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்