கரோனா கொடுங்காலம் நீடித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியும், பொருளாதாரமும் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது என்றாலும் பண்டிகை, திருவிழா என்றால் கடன் பெற்றாவது புத்தாடைகள் வாங்கி குழந்தைகளுக்கு தர வேண்டும் என மக்களின் விருப்பம் உள்ளது.
விரலுக்கேற்ற வீக்கம் போல இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்களால் முடிந்த அளவுக்கு புது துணிகள் வாங்க நகர பகுதி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஈரோட்டின் பிரதான வீதியான பன்னீர்செல்வம் பூங்கா சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.சாலையில் திரண்ட மக்கள் கூட்டம் தான் இது. இங்கு தான் பெரும்பான்மையான பெரிய மற்றும் சிறிய துணி கடைகள் உள்ளது.
கரோனா அச்சமெல்லாம் எதுவும் இல்லை. எப்போதும் போல் மக்கள் கூட்டமாக இயல்பாக இருப்பது ஒரு விதத்தில் பயமாக இருந்தாலும் மற்றொரு புறம் இயல்பான வாழ்க்கை வாழ விடுங்கள் என்பது போலதான் உள்ளது.