Skip to main content

ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள் போராட்டம்!!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

ஓய்வு பெற்ற பிறகும் எங்களுக்கு வர வேண்டிய சட்ட பூர்வ சலுகைகளை போராடித் தான் பெற வேண்டியிருக்கிறது என தள்ளாத வயதிலும் உறுதியுடன் போராடுகிறார்கள் பணி ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள்.
 

erode strike


ஈரோடு மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூபெற்றோர் நல அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் குழந்தைசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மின் ஊழியர்  மாநில செயலாளர் ஜோதிமணி, மாநில தலைவர் சின்னசாமி ஆகியோரும்  கலந்து கொண்டனர். 


இதில், இவர்களின் கோரிக்கையாக "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மின்வாரிய வைரவிழா சலுகைகளை 1-12-2015 ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கிட வேண்டும். ஒப்பந்த சொசைட்டி தொழிலாளர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்திட வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். தர ஊதியம் 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல 2006ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கிட வேண்டும்" என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

.
 

சார்ந்த செய்திகள்