வருமானவரித்துறை ரெய்டு என்றாலே அது பிரபலமான அரசியல்வாதிகள் வீடுகள் உயரதிகாரிகள் வீடுகள் பெரும் தொழிலதிபர்கள் என இந்த ரெய்டு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது வருமானவரித்துறை தொழில் செய்கிற எல்லோரையும் கணக்கெடுத்து தனது அதிரடி ரெய்டில் தீவிரமாக உள்ளது. அப்படித்தான் ஈரோட்டில் கடந்த 2 மாதத்தில் நான்கைந்து நிறுவனங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியது இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொழில் நிறுவனத்தில் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.
ராம் விலாஸ் என்ற உணவகம் நடத்தி வரும் ஒரு தொழிலதிபர். அவரது ஹோட்டல், தங்கும் விடுதிகளும் அவரது இன்னொரு தொழில் நிறுவனமான பேட்டரி கடையிலும் மற்றும் அவரது வீடு என நான்கு இடத்தில் இன்று காலை 25 வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்றும் புதிதாக யாரையும் உள்ளே விடாமல் ரெய்டு செய்கிறார்கள்.
வருவாய் ஆண்டு மார்ச் 31 என்பதால் இவர்கள் முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு கட்டினார்களா வருமான வரியை செலுத்தினார்களா என்றும், எவ்வளவு இவர்கள் இந்த வருடத்தில் வருவாய் ஈட்டினார்கள் அதற்கு எவ்வளவு வரி என புள்ளி விவரத்தோடு அலசுகிறார்கள். பொதுவாக இதுபோன்று தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் பெரும் செல்வந்தர்கள் அல்ல நடுத்தரமான ஒரு தொழிலதிபர்கள் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தினாலும் இவர்களது உற்பத்தி மற்றும் விற்பனையில் கணக்கு வழக்கு 100% சரியாக இருக்காது. அதற்கு காரணம் இவர்கள் பொருள் வாங்கும் நிறுவனத்திற்கு கடன் வைத்திருப்பதும் பிறகு அதை கட்டுவதும் அதேபோல் இவர்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு கடனாக தருவதும் அதை மறுபடியும் வசூலிப்பதும் என ஒரு தொழிலில் நேக்கு போக்காக இருந்தால்தான் அந்த தொழில் நடத்த முடியும் என்பதால் அப்படி செய்வார்கள் இதைத்தான் வருமானவரித்துறை துல்லியமாக கண்டுபிடித்து நீங்கள் இவ்வளவு வரி செலுத்திய தீரவேண்டும் என்று அவர்களுக்கு வரி விதிப்பது வழக்கமாக இருக்கிறது.
பெரும் தொழில் புரிவோருக்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடுத்தரமான தொழில் புரிவோருக்கு இது அவர்களை நசுக்குவது போல் உள்ளது என பரிதாபமாக கூறுகிறார்கள் ஈரோடு பகுதியில் தொழில் புரிவோர்.