Skip to main content

மின் கட்டண உயர்வு - ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மா.செ., கூட்டம் தொடங்கியது!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

ghj

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகின்றது. சென்னை அதிக பாதிப்புக்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

 

அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் கரோனா பாதிப்பு மற்றும் மின் கட்டண உயர்வு பற்றி விவாதிப்பதற்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாகச் சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் மின் கட்டண உயர்வு மற்றும் கரோனா தொடர்பாக அரசைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்