Skip to main content

எடப்பாடி பழனிச்சாமிக்கு திருப்பூர் சுப்பராயன் கடிதம்

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் திருப்பூர் சுப்பராயன் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.


 

lok sabha member K. Subbarayan



அதில் அவர், தமிழகத்தில் உள்ள ஆஷா பணியாளர்கள் தற்போது கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் 24 மணி நேரமும் உழைக்கிறார்கள். அவர்கள் கிராமங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள். இப்போது இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்களின் செயல்பாடுகள் இப்போது மிகப்பெரிய உதவியை கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகையாக 10,000 ரூபாய் தருவதோடு நோய்த் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்