திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று சென்னை விமானநிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்- அமைச்சர் வேலுமணியுடன் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் திடீர் ஆலோசனை நடத்தினார் . ஆனால் அந்த ஆலோசனையின் போது தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திற்கு சென்று கூட்டணி பேச வைத்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அதிமுக தேமுதிக கூட்டணி அறிவிக்கப்படாத நிலையில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் கொடிகள் மோடி பொதுக்கூட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது.
திமுகவும், தேமுதிக கேட்கும் அளவிலான தொகுதிகளை இப்போது ஒதுக்கமுடியாது. நேற்றே கூட்டணி இறுதிவடிவம் பெற்றது என கைவிரித்த நிலையில், தற்போது நேற்று தேமுதிக நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தது தொடர்பாக திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விவரித்து ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.