Skip to main content

பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்த துரை வைகோ! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Durai Vaiko launches bus service on Ilayarasanandal route

 

ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது குருவிகுளம் யூனியன் இளையரசனேந்தல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட இலட்சுமி அம்மாள்புரம், புளியங்குளம்,இளையரசநேந்தல் கீழக்காலணி கிராம பொதுமக்கள் சார்பில் மறுமலர்ச்சி திமுக கிளைச் செயலாளர் ராஜாராமன் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.   

 

கோவில்பட்டியில் இருந்து வரகனூர் வரை செல்லும் பேருந்து புளியங்குளம், இலட்சுமி அம்மாள் புரம், இளையரசநேந்தல்  கீழக்காலணி வழியாக வரகனூர் வரை சென்று கொண்டிருந்த வழித்தடம் எண் (6) அரசுப் பேருந்தை சாலை பராமரிப்பு பணி காரணமாக கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது சாலைப் பராமரிப்பு பணிகள் நிறைவு அடைந்தும் காலை 06.00 மணிக்கு ஒருமுறை மட்டும் இயங்கி வருகின்றது. காலை 06.00  மணி என்பது முழு பயனுள்ளதாக இல்லை. எனவே, அந்த அரசு பேருந்துப் போக்குவரத்தை முன்பு போல தொடர ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தனர். 

 

அதன்படி, ஒன்றிய செயலாளர் ராஜகோபால், கிளைச் செயலாளர் ராஜாராம் மூலம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அதற்கான பேருந்துப் போக்குவரத்து தொடர்ந்து தாமதமாகி வந்தது. கடந்த வாரம் தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சென்று சந்தித்தேன்.

Durai Vaiko launches bus service on Ilayarasanandal route

குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கி கிராம மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அமைச்சரும் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார்.அதன்படி, இன்று (24/05/2022) காலை மேற்குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் மக்கள் கேட்டுக்கொண்ட நேர அடிப்படையில் நாளொன்றுக்கு ஆறு முறையாக அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தேன்.

 

தமிழக அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக இருந்து நாம் முன்னெடுத்த கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்