Skip to main content

ஓவிய ஆசிரியரின் சல்லாபம் காயத்துக்கு மருந்து வைத்த சிறுமியை காயப்படுத்திய கொடூரம்

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சோ்ந்தவா் விஜய் (27) அங்குள்ள டெக்னோ பார்க் மென் பொருள் கம்பெனியில் வரைப்படம் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். மேலும் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய  ஆசிரியராக இருப்பதோடு தற்போது கோடை கால ஓவிய பயிற்சியை வீட்டில் வைத்து நடத்தி வருகிறார். இதில் அந்த பகுதியை சோ்ந்த 30 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயின்று வருகிறார்கள். 

 

child abusing


            
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய விஜய், காயத்துடன் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தன்னிடம் ஓவியம் படித்து வரும் பக்கத்து வீட்டை சோ்ந்த 9 வயது சிறுமியை அழைத்து முதுகில் உள்ள காயத்துக்கு மருந்து போட சொல்லியுள்ளார். 



அப்போது விஜய்க்கு சல்லாபம் தலக்கு ஏறி அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னா் வீட்டுக்கு சென்ற அந்த சிறுமிக்கு உடம்பில் ரத்தம் வடிவதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியிடம் நடந்ததை கேட்கும்போதே சிறுமி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். 

          
பின்னா் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் கொடுத்தனா். இதையடுத்து வழக்கு பதிவு செய்த களக்கூட்டம் போலீசார் போக்ஸோ சட்டத்தில் விஜயை கைது செய்தனா். 

 

 

 

சார்ந்த செய்திகள்