Skip to main content

“வேற எதுவும் கேட்காதீங்க” - டென்ஷன் ஆன செல்லூர் ராஜு

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

nn

 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி பிரம்மாண்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''எங்களுடைய மாநாட்டின் கதாநாயகனே எடப்பாடி பழனிசாமி தான். எம்ஜிஆர் இருக்கும் வரை அவர் தான் அதிமுகவின் எல்லா சக்தியாகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வந்த பின்பு அவர்தான் அதிமுகவின் எல்லா சக்தியாகவும் இருந்தார். ஆக்கலும் அழித்தலும் அவருக்கு உரியது என இருந்தது. அதேபோல் இன்று அதிமுகவின் தலைமையை ஏற்று இருக்கிற எடப்பாடி பழனிசாமி தான் இன்றைக்கு அதிமுகவுக்கு அனைத்துமாக இருக்கிறார்.

 

மாநாட்டிற்கு பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டுள்ளது. இருக்கையே ஒரு லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. முதலில் 40 ஆயிரம், 50 ஆயிரம், 60 ஆயிரம் என இருக்கைகள் இருந்தது. தற்பொழுது லட்சத்து 26 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இவ்வளவு இருக்கைகள் இருக்கின்ற மாநாடு எதுவென்றால் அது அதிமுகவின் பொன்விழா மாநாடு தான்'' என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் மோடி, அமித்ஷா குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு, ''ஏங்க மாநாடு குறித்து மட்டும் கேளுங்க. வேற எதுவும் கேட்காதீங்க'' என டென்ஷன் ஆனார். மீண்டும் செய்தியாளர் ஒருவர், 'பாஜகவின் பாரம் தாங்கியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்' என முதல்வர் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “யார் இருக்கிறார்கள் என்பது அவருடைய மனசாட்சிக்கு தெரியும். திமுகவை அழிக்கும் சக்தியாக இந்த மாநாடு இருக்கும். மாநாடு வெற்றி பெறும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்